இனாம்குளத்தூர் ஊர் கண்மாய்

அமைவிடம் - இனாம்குளத்தூர் ஊர் கண்மாய்
ஊர் - இனாம்குளத்தூர்
வட்டம் - இலுப்பூர்
மாவட்டம் - புதுக்கோட்டை
வகை - ஈமச்சின்னம் மற்றும் வாழ்விடப்பகுதி -தாழி, பானையோடுகள்
கிடைத்த தொல்பொருட்கள் - BRW, BW, RW, CRW, RSW பானையோடுகள், Grooved and impressed பானையோடுகள்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2014
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மதுரை கோ.சசிகலா

விளக்கம் -

ஊரின் வடக்குப்பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பெருங்கற்கால வாழ்விடப்பகுதி காணப்படுகின்றது. இங்கு BRW, BW, RW, CRW, RSW போன்ற பானையோடுகளும், Grooved and impressed போன்ற பானையோடுகளும் காணப்படுகின்றன. மேலும் கண்மாயின் உட்பகுதியில் தாழிவகையைச் சேர்ந்த ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன.

ஒளிப்படம்எடுத்தவர் - மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டத்தில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வட்டாரத்தில் உள்ள பல ஊர்களில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்றுக்காலம் ஆகியவற்றைச் சேர்ந்த தொல்லியல் எச்சங்கள் மேற்பரப்பு களஆய்வில் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. அத்தகையதொரு தொல்லியல் தரவுகளைக் கொண்ட ஊரான இனாம் குளத்தூர் திருச்சியிலிருந்து மணப்பாறை செல்லும் சாலையில் 16 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.